14 Dec 2017

அதன் வழி அதுக்குத் தெரியும்

அதன் வழி அதுக்குத் தெரியும்
மண்ணை அள்ளிப் போட்டு மூடுங்கள்
நகர்களை உருவாக்குங்கள்
கட்டிடங்களை நகர்த்திக் கட்டுங்கள்
ஆக்கிரமிப்புச் செய்யுங்கள்
புறம்போக்கை வளையுங்கள்
நத்தஞ்சாரி அது இது எதுவோ என
எப்படி வேண்டுமானாலும்
பட்டா பண்ணுங்கள்
நன்செய் புன்செய் என
எப்படி வேண்டுமோ மாற்றிக் கொள்ளுங்கள்
வெள்ளத்துக்கு அதன் வழி தெரியும்

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...