14 Dec 2017

பூப்பட்டம்

பூப்பட்டம்
காய்க்காத தென்னை
பூ பிடித்து பிஞ்சு வைக்காத
கத்திரி
பருவம் கடந்தும்
பூக்காத மல்லி
எதுக்குடி தண்டமா
தண்ணி ஊத்தி
மாளுறே? என்றால்
சிரித்துக் கொண்டே
எதுவும் சொல்லாமல் போய் விடுவாள்
நாளது தேதி வரை
மலடி என்ற பட்டம்
சுமந்து நிற்கும் அவள்.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...