26 Dec 2017

எழுத்தெனப்படுவது...

எழுத்தெனப்படுவது...
எல்லாவற்றையும் போல
எழுத்தும் ஒரு மாற்றம்
இசையைப் போல
நடனத்தைப் போல
நிமிடத்தை உறைய வைக்கும்
அதிசயங்களில் அதுவும் ஒன்று
இசையை ரசிக்கும் ஒரு பிரிவினரைப் போல
நடனத்தை ரசிக்கும் ஒரு பிரிவினரைப் போல
எழுத்தை ரசிக்கும் ஒரு பிரிவினரும் உண்டு
அவர்களைக் கொண்டு மட்டும்
மாற்றம் வந்து விடும் என்று சொல்வதற்கில்லை
இசை எதற்காக இசைக்கப்படுகிறதோ
நடனம் எதற்காக ஆடப்படுகிறதோ
எழுத்தும் அப்படித்தான் எழுதப்படுகிறது
வாசிக்கலாம்
வாசிக்காமல் போகலாம்
வாசித்து மாறலாம்
மாறாமல் போகலாம்
மனதை மாற்றும் ரசவாத வித்தை எழுத்து
மொத்த பூமியையும் பொன்னாக்கும்
ரசவாத வித்தையைக் கண்டுபிடிப்பதற்குரியதன்று
அதற்காக எழுத்துகள் நின்று விடாது
அவைகள் உதிர்ந்து கொண்டிருக்கும்
பறிப்பார் இல்லாவிட்டாலும்
மரத்திலிருந்து கொட்டும் மலர்கள் போல.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...