17 Dec 2017

படித்தப் பெண்களுக்கானத் தீர்ப்பு

படித்தப் பெண்களுக்கானத் தீர்ப்பு
இருவருமாக
பீச், ஈ.சி.ஆர்., மகாபலிபுரம்
என்று அலைந்த நாட்கள் எத்தனையோ!
உன் மலர்த்தலில்
மலராகி கருவாகி நின்ற பின்
உன்னை செலவழிக்கச் செய்து
நடுரோட்டில் நிறுத்தி விட்டதாக
என் மேல் வழக்குத் தொடர்ந்தாய்.
பெற்ற குழந்தையை விற்று
வழக்கிற்கான செலவடைத்த பின்
படித்தப் பெண்கள் ஏமாந்ததாகச் சொல்வதை
இனியும் ஏற்க முடியாது என்று
தீர்ப்பு சொல்லிற்று.
நீ இன்னொரு பெண்ணை
அழைத்துக் கொண்டு
ஊர் சுற்றக் கிளம்பினாய்
அவளின் நடை உடை பாவனையைக் கொண்டு
ஒருவாறாகக் கணித்தேன்
அவளும் படித்தப் பெண்ணாகத்தான்
இருக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...