1 Dec 2017

படைப்பின் கெளரவம்

படைப்பின் கெளரவம்
கவிதையின் கால் உடைத்து
செய்த சூப்
அருமையோ அருமை.
கட்டுரையின் ஈரல் எடுத்து
செய்த வறுவல்
ஏக ருசி.
கதையின் நெஞ்செலும்பு பிளந்து
செய்த பிரியாணி
சிறப்போ சிறப்போ.
இப்போது இவைகளையெல்லாம்
ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு
காத்திருப்பது
கெளரவமோ கெளரவம்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...