விதி என்பது விதியும்தான்!
எதைச் சொன்னாலும் அதைச் செய்யாதே என்பார்
எஸ்.கே. எஸ்.கே.யுடன் தொடர்புடைய பலரின் பாதி மனத்தடைகளுக்கும், செயலின்மைக்கும் எஸ்.கே.
ஒரு முக்கியக் காரணம்.
"எதையும் செய்யாமல் இருப்பதற்குப்
பெயர் ஒரு வாழ்வா என்ன?" என்று எஸ்.கே.விடம் வினவ முடியாது. எஸ்.கே. இந்த விசயத்தில்
மிகப்பெரிய குழப்பவாதி. அவர் குழப்பத்தை மற்றவர்களிடம் திணிப்பதில் வெற்றி பெற்று விடுவார்.
எஸ்.கே. தன் மனதுக்குள் அநாவசிய ரோச உணர்வுகளை
வைத்துக் கொண்டும், முடிவெடுப்பதில் தாமதப்படுத்துவதை செய்து கொண்டும் ஏற்படுத்தும்
பிரச்சனைகள் ஒன்றல்ல, ரெண்டல்ல, ஏராளம்.
எஸ்.கே. தன் மனதை நிலைபடுத்திக் கொள்ளத்
தெரியாமல் தவிக்கிறார். அது அவரைச் சுற்றியுள்ளவர்களைப் பாதிக்கிறது. எதிலும் ஒரு முடிவுக்கு
வர முடியாமல் எஸ்.கே. படும் பாடு அவரைச் சுற்றியுள்ளவர்களும் பட வேண்டியதாக இருக்கிறது.
எல்லாம் நேரம், தலைவிதி என்று எஸ்.கே.வைச்
சுற்றியுள்ள பலர் இதற்காக நொந்து கொண்டு ஆறுதல் பட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு
அதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
"உங்கள் ஒருவரின் குழப்பம் மற்றவர்களைச்
சம்பந்தம் இல்லாமல் குழப்பி ஆழ்த்தி சங்கடப்படுத்தி விடக் கூடாது" என்று எஸ்.கே.
தனது புத்தகம் ஒன்றில் எழுதி இருக்கிறார். ஆனால் விதி?! எஸ்.கே. எழுதி அவரால் கடைபிடிக்க
முடியாமல் போன விசயத்தில் இதுவும் ஒன்றாக இன்றளவும் நீடித்து வருகிறது.
*****
No comments:
Post a Comment