அரக்கனின் ஆசுவாசம்
பணமென்னும்
கோர அரக்கன்
இடைத்தேர்தலில்
புகுந்தான்
காமாட்சி விளக்குகளாய்
மாறி
இருண்டு கிடந்த
வீடுகளில்
ஒளி வீசினான்
டாஸ்மாக் முன்பு
நின்று
வயிறு முட்ட
குடித்து
குத்தாட்டம்
போட்டான்
ஐநூறு, ஆயிரம்,
ரெண்டாயிரம், ஐயாயிரம் என்று
கட்சிகளுக்குத்
தகுந்தாற் போல்
வாக்காளர்
கையில்
தஞ்சம் புகுந்து
ஜனநாயக் கடமையாற்றச்
சொல்லி
பிரசங்கம்
செய்தான்
கொலுசுகளாய்,
மூக்குத்திகளாய் வடிவெடுத்து
பெண்டிரையும்
அழகுபடுத்தினான்
இப்படி உருமாறி
உருமாறி
களைப்புற்றப்
போன அவன்
அடுத்த இடைத்தேர்தலுக்கு
ஆறுமாத இடைவெளி
கேட்ட போது
இடைத்தேர்தல்
ரத்து என்று வந்த செய்தி
ஆசுவாசம் தந்தது
அவனுக்கு.
*****
No comments:
Post a Comment