2 Nov 2017

இடைச்சொல்

இடைச்சொல்
இட்லி சுடும் ஆயாவுக்கு
இரண்டாயிரம் கிடைத்தது
துப்புரவு தொழிலாளி
ஐநூறு ரூபாய் நோட்டை
முதன் முதலாய்ப் பார்த்தார்
திருநங்கை என்று பாரபட்சம் பாராது
இரண்டு ஐநூறு நோட்டுகள்
அவருக்கும் வழங்கப்பட்டது
ஒரு வேட்பாளர் இரண்டாயிரம்
கொடுப்பதைக் கேள்வி பட்ட
மற்றொரு வேட்பாளர் ஐயாயிரம்
கொடுக்க முன்வந்தார்
இப்படிப்பட்ட இடைத்தேர்தலா
பணப்புழக்கத்தைக் காரணம் காட்டி
ரத்து செய்யப்பட்டது
என்று விவாதிக்கப்பட்டதற்கு
முதியோர் பென்சன் மூன்று மாதங்களாய்க்
கிடைக்கப்பெறாத முத்துச்சாமி பதில் சொன்னார்,
"நம்ம ஏரியாவுல கக்கூஸ் கட்டுறதுக்கும்,
தொகுப்பு வீடு கட்டுறதுக்கும்
ஒதுக்குன பணத்துலதாம்ல
ஆயிரமும் ஐநூறும் ரெண்டாயிரமும்னு
அவனவனும் கொடுக்குறான்!
அவன் காசுல கொடுக்கறதுக்கு
அவன் ஏன்லா தேர்தல்ல நிக்குறான்?"

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...