10 Nov 2017

கடைசியில் தெறிக்கும் வன்முறை!

கடைசியில் தெறிக்கும் வன்முறை!
            தன்னால் முடியாதோ என்பது போல எஸ்.கே. பல நேரங்களில் நினைத்திருக்கிறார். மனச்சோர்வும், இறுக்கமான மனநிலையும் அவரை அப்படி நினைக்கச் செய்து விடுவதாக அவர் சில நேரங்களில் கூறியிருக்கிறார்.
            அதிகப்படியான நிபந்தனைகளும், கட்டுபாடுகளும் மனதில் நிலவும் போது சுதந்திரமான மனநிலை பாதிக்கப்பட்டு அப்படி எண்ணுவது தவிர்க்க முடியாததாகிறது என்பது எஸ்.கே.வின் எண்ணம்.
            "எஸ்.கே.வுக்கு என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கிறது, அதில் யாரும் எதுவும் செய்ய இயலாது, அப்படி நடக்க வேண்டும் என்றால் யாருடைய முயற்சியும் இன்றியும் நடக்கும், அப்படி நடக்காது என்றால் என்னதான் முயற்சி செய்தாலும் நடக்காது!" என்பது எஸ்.கே.வே தன்னைக் குறித்து கூறிய பிரபலமான வாசகம்.
            எஸ்.கே. அடிக்கடிச் சொல்வார், "ஒரு விசயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விதி அல்ல, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதி, எல்லா ஊருக்கும் ஒரே பாதையில் போக முடியாது என்பது போல!"
            இதை எஸ்.கே. சொல்வதில் காரணம் இருப்பதாக எஸ்.கே.வே சொல்வார். இங்கு எல்லாரும் மனரீதியாக பலவீனப்படுத்தி விடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்களே தவிர, எதை எப்போது வெளிப்படுத்த வேண்டும், எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களாக, அவரவர் மனநிலையே முக்கியம் என்பது போல இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் என்ன செய்ய வேண்டுமானாலும் தயாராக இருக்கிறார்கள். ஆம் ஒரு கொலை கூட செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?
            எஸ்.கே.யின் கடைசி வரியைப் படித்து நீங்கள் பயந்து விடலாம். ஆனால் வார்த்தைகளில் வன்முறைகளைத் தெளிப்பவர் அல்லர் எஸ்.கே. நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வன்முறையை வார்த்தையில் தெளித்திருக்கிறார்!

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...