11 Nov 2017

ஒன்றின் மேல் இரண்டு

ஒன்றின் மேல் இரண்டு
டி.வி. ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது
அவ்வபோது வந்து பார்த்துக் கொண்டே
சமைத்துக் கொண்டிருக்கிறாள் அம்மா.
கறி வாசத்துக்கு மட்டுபடாது
லேப் டாப்பிலிருந்து எழுந்து வந்து
பார்த்து விட்டுப் போகிறான் அண்ணன்
செய்தித்தாளிலிருந்து எட்டிப் பார்த்து
சூப் வருமா என நோட்டமிடுகிறார் அப்பா.
பூண்டை உரித்து இஞ்சியைத் தோல் நீக்கி
மிக்சியில் போடும் அக்கா
புதிய செய்திகளின் வரவு சொல்லும்
செல்போன் ஒலிக்காக நுட்பமாக காது குவிக்கிறாள்.
நிகழ்வனவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் வீடும்
அவ்வபோது எட்டிப் பார்த்துக் கொள்கிறது
பக்கத்து வீட்டின் கதவு, ஜன்னல்களை.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...