13 Nov 2017

பாக்கியவான்களாகுவீர் அபாக்கியவான்களே!

பாக்கியவான்களாகுவீர் அபாக்கியவான்களே!
பணமிருப்பவர்களின்
நீச்சல் குளங்களை நிரப்பிய பின்
வெற்று டேங்கோடு வரும்
தண்ணீல் லாரிகள்
இல்லாதவர்களின் கண்ணீரை
நிரப்பிக் கொள்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாக
சேர்த்தவர்களைத்
தப்பவிட்ட வருமான வரிச் சோதனைகள்
வருமானம் குறைவானவர்களின்
பாக்கெட்டுகளை
வரிகளாய்க் காலி செய்கின்றன.
ஆக்கிரமிப்பு நிலங்களைக்
கையகப்படுத்த முடியாத
சட்டங்கள்
எளிதாக உறிஞ்சிக் கொள்கின்றன
உழவின் வயல்களை.
யார் தலையில் கை வைத்தால்
மொட்டையடிக்க முடியும் என்று
அரிவாள்களை வைத்துக் கொண்டு
அலையும் தேசத்தில்
மொட்டையர்களாய் அலைபவர்கள்
உண்மையில் பாக்கியவான்கள்.

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...