13 Nov 2017

டைரிக் குறிப்புகள்

டைரிக் குறிப்புகள்
வாங்கிய டைரிகள் முழுதும்
மளிகைக் கணக்குகள்
வரவு செலவுக் கணக்குகள்
கடன் விவரங்கள்
அடங்கிய அவனது
22 வது வயதில் வாங்கிய டைரி மட்டும்
கவிதைகளால் நிரம்பியிருந்தது.
44 வது வயது டைரியில்
தொடர்பு எண்களும்
இமெயில் ஐ.டி.களும் எழுதப்பட்டிருந்தது.
போர்டு மெம்பர் ஆன பின்
சில வருட டைரிகள் முழுவதும்
கொடுக்கல் வாங்கல் கணக்குகளும்
விலாசங்களும் எழுதப்பட்டிருந்தன.
கவிதை எழுதிய டைரி மட்டும்
புத்தகமாக வெளிவந்தது.
கடவுச்சொல்லோடு நுழையும்
ஆன்ட்ராய்டு மொபைலில்
விவரங்கள் பதியப்பட்ட பிறகு
எஞ்சிய டைரிகள்
தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
வெற்றுத்தாள்கள் படபடக்கும்
இப்போதைய டைரிகளில்
சில மாத்திரைகளின் பெயர்களும்
எடுக்க வேண்டிய டெஸ்டுகளும் மட்டும்
குறித்துக் கொள்ளப்படுகின்றன.

*****

No comments:

Post a Comment