16 Nov 2017

ஆச்சிக்கு இறுதி மரியாதை

ஆச்சிக்கு இறுதி மரியாதை
ஆச்சி இறந்த போது
அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டினோம்
ஆட்டோ மேல் ஸ்பீக்கர்கள் கட்டி
தெருவெல்லாம் அறிவிப்பு செய்தோம்.
தபால் தலை அளவு படத்தோடு
செய்தித்தாளில் விளம்பரம் செய்தோம்
தூரத்துச் சொந்தங்கள் வரை
செல்பேசியில் தொடர்பு கொண்டோம்
எவரும் விடுபடல் ஆகாது என்று
வாட்ஸ் அப், பேஸ்புக் பதிவுகள் இட்டோம்
முதியோர் இல்லத்திலிருந்து
ஆச்சியின் உடல் வீடு வருதற்கு முன்
இத்தனையும் செய்து முடித்தோம்.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...