16 Nov 2017

ஊற்றப்படாத தேநீர்

ஊற்றப்படாத தேநீர்
ஒரு கோப்பைத் தேநீர்
காலியான போது
வாழ்க்கை முழுவதையும்
இறக்கி வைத்தேன்.
"இன்னொரு கோப்பைத்
தேநீர் வேண்டுமா?"
என்று கேட்ட போது
இறக்கி வைக்க
இன்னொரு வாழ்க்கை  இல்லை என்று
காலிக் கோப்பையே போதுமென்று
எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.
நீ உன் தேநீரை
ஊற்ற முடியாமல்
தவித்து நின்றாய்.
நான் அங்கிருந்து
ஓட ஆரம்பித்தேன்.
நீ துரத்தும் எண்ணமிழந்து
நின்றிருக்கையில்
உன் தேநீர் நிரம்பி வழியத் துவங்கியது.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...