19 Nov 2017

புதிர்ச் சொடுக்கு

புதிர்ச் சொடுக்கு
"நட்ட மரத்திற்கு
நீரூற்ற ஆளில்லா ஊரில்
கருவேல மரங்களை
வெட்ட ஆளிருக்கு
அது என்ன?"
விடுகதை போட்டாள் மகள்.
"அனாதை இல்லமும்
முதியோர் இல்லமும்"
என்ற பதிலுக்கு
"இல்ல
இது கூடவா தெரியல
நூறு நாள் வேலையில
வெட்டுன குளமும்,
நூறடி ரோட்டால
தூர்ந்துப் போன குளமும்" என்று
சொடுக்குப் போட்டுச்
சிரிக்கிறாள் மகள்.

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...