19 Nov 2017

பறத்தலின் சாத்தியம்

பறத்தலின் சாத்தியம்
பிறந்த பொழுதே
இன்ன பள்ளி
இன்ன கல்லூரி
இன்ன வேலை
இன்ன வகைப் பெண்
இன்ன வகை வீடு
இன்ன வகை வாழ்க்கை
என முடிவாகி
விட்டு விடுதலையாகி
பறத்தலின் சாத்தியம் வாய்க்கவில்லை
பிள்ளை வளர்ப்பை
எனக்கெல்லாம் தெரியும் என்று
கார்ப்பரேட் மயமாக்கிய
எல்லாம் உன் நல்லதுக்குத்தான் எனும்
காம்ரேட் தந்தைகளால்.

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...