5 Nov 2017

எங்கள் ஊரில்...

எங்கள் ஊரில்...
ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது
பேருந்தேறி ஒன்பது கிலோ மீட்டர் செல்ல வேண்டும்
ஒரு பள்ளிக்கூடம் கிடையாது
இரண்டு ஊர் தள்ளியிருக்கும் பள்ளிக்கூடத்துக்கு
உடைந்த மூங்கில் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்
நான்கு ஊருக்குப் பொதுவாக இருக்கும்
மூன்றரை கிலோ மீட்டர் தள்ளியிருக்கும்
சமுதாயக் கூடம்
விஷேசம் சடங்குகளுக்கு உதவும்.
ஆத்திர அவசரத்துக்கு பட்டணம் செல்ல
நாளுக்கு இரண்டு முறை வரும்
பேருந்தே கதி.
எப்போதாவது வரும்
கிராம நிர்வாக அலுவலுருக்காக
எப்போதும் பூட்டியிருக்கும் அலுவலகம்.
சிதிலமடைந்த கோயிலைத்
தூக்கி நிறுத்த முடியாமல்
கீற்றுக் கொட்டகையில்
குடியிருக்கிறார் அழுக்கடைந்த பிள்ளையார்.
எந்த வசதியும் இல்லாவிட்டாலும்
எப்போதும் குடித்திருக்க, குடித்து களித்திருக்க
ஊருக்கு மைய மண்டபத்தில்
ஒரு டாஸ்மாக் உண்டு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...