5 Nov 2017

கேள்விகளுக்கான பேன்டேஜ்கள்

கேள்விகளுக்கான பேன்டேஜ்கள்
கருப்புப் பணத்தை
வெளிக் கொண்டு வர
பணமாற்ற மதிப்பையும் அறிவிக்கலாம்.
ஓர் இடைத்தேர்தலையோ
அல்லது பொதுத்தேர்தலையோ அறிவித்து
யாரும் எதிர்பார்க்காத வேளையில்
திடீரென ரத்தும் செய்யலாம்.
இந்த நாட்டில்
யார் யார் எப்படிச் சம்பாதிக்கிறார்களோ
யாருக்குத் தெரியும் என்பது
தேர்தல் வந்தால் தெரியும்
கோடியில் சம்பாதித்தவர் களத்தில் நிற்பார்
தெருக்கோடியில் நிற்பவர்
வாக்குக்கு அறுவடை செய்ய கலத்தோடு நிற்பார்
விற்கப்படும் ஓட்டில்தான்
ஐந்தாண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையிலான
வாய்க்கான பேண்டேஜ் ஒட்டப்பட
மீண்டும் கோஷமிட
ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது
நாம் அறியாததுமல்ல
வாயை அடைத்து விட்டால்
நம் கையைக் கட்டி விட்டு நம்மை
என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது
அரசியல்வாதிகளுக்குத் தெரியாததுமல்ல.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...