முத்தங்களைக் கக்கிய பொழுதுகள்
முத்தங்களைக்
கக்கிய
கைபேசியில்
நானூறு முறை பேசியாயிற்று
அவரவர் அரை
நிர்வாணங்களை
வாட்ஸ்அப்பில்
பகிர்ந்தும் ஆயிற்று
பேஸ்புக்கில்
பதிவான உளறல் மொழிகள்
உலகம் முழுவதையும்
வலம் வருகிறது
கனவுகள் துகள்
துகளாய்ச் சிதறிப் பரவ
ஆடையற்ற உடலோடு
அறையின் மூலையினின்று
தனித்துப்
பரவும் கண்ணீரின் கோடுகள்
இரவுக்குள்
தோன்றி பகலுக்குள் மறைந்து விடும்
காமம் என்ற
சொல்லை நாகரிகக் குறைவு என்று
பேசாது ஒழித்து
காதல் என்ற
சொல்லை வன்மமாக்கியப் பிறகு
நேசம் என்று
சொல்லை சொல்ல
யார்க்குதான்
வாய் கூசுகிறது?
*****
நன்றி - ஆனந்த விகடன் - இதழ்
08.11.2017 - பக்கம் 50
No comments:
Post a Comment