பாடல் மாற்றங்கள்
இசையோடு பாடியவளின்
கிறக்கத்தில்
சிலாகித்து
முணுமுணுத்துப்
பாடிய
அவளின் பாடலைக்
கேட்டு
அதே பாடலை
மீண்டும் கேட்ட
போது
அந்தப் பாடல்
அவள் பாடிய
பாடல் போலில்லை.
*****
கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...
No comments:
Post a Comment