7 Nov 2017

குளத்தின் சந்தோசத் தாகம்

குளத்தின் சந்தோசத் தாகம்
அல்லி, தாமரை பூத்த குளத்தின்
நீரற்ற கோடைக் காலத்தில்
காட்டாமணக்கு ஸ்டம்புகளோடு
தொடங்குகின்றது சிறுபிள்ளைகளின் கிரிக்கெட்.
சிக்ஸ், போர், அவுட் என்ற அவர்களின்
ஆரவார முழக்கங்களின் முன்
தோற்றுப் போகிறான்
வியர்க்க வைத்து விரட்டி விடலாமென்று
நினைத்த சூரியன்.
ஆட்டத்திற்கு இடையில்
தாகத்திற்கென்று ஒதுங்கும் அவர்கள்
பருகும் வாட்டர் பாட்டில் தண்ணீரில்
ஒரு சில சொட்டுகள் விழும் போது
தன் இருப்பைப் பதிவு செய்து நிரூபித்த விட்டதன்
தனக்கான சந்தோஷத் தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறது
பாளம் பாளமாய்ப் பிளந்து கிடக்கும் குளம்
ஒரு பெருமழையைப் பருகியதைப் போல.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...