7 Nov 2017

குவார்ட்டர் பொம்மைகள்

குவார்ட்டர் பொம்மைகள்
அறுபது ரூபாய் பொம்மை கேட்டு
அடம் பிடிக்கும்
மகளைத் தணித்த அப்பா
பத்து ரூபாய் பொம்மை விற்கும் கடையை நோக்கி
நகர்கிறார்
அறுபதுக்கும், பத்துக்கும் இடையே இருக்கும்
ஐம்பது ரூபாய்
அப்பாவின் பொன்னிற கனவுக்குள்
மின்னுகிறது
குவார்ட்டருக்கான காசை
தட்டிப் பறித்து விட
ஒரு பொம்மையை அனுமதித்து விடக் கூடாதென்ற
சாமர்த்தியத்திற்குள்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...