14 Nov 2017

நெடுஞ்சாலைப் பாட்டி

நெடுஞ்சாலைப் பாட்டி
இந்த நெடுஞ்சாலையைத்
தோண்டிப் பார்த்தால்
ஆறு
குளம்
ஏரி
ஏழைகளின் குடிசைகள் என
ஏகப்பட்டவை இருக்கும்.
எல்லாவற்றையும்
மன்னித்து விட்ட
புன்னகையோடு
வாகனங்களில் செல்வோர்களுக்காக
வெள்ளரி விற்கும் பாட்டியை
நோக்கிப் பார்த்தால்
அன்பு
ஆறுதல்
எல்லாம் இழந்த பின்னும்
கண்களில் சொட்டும்
நம்பிக்கை
என்னமோ பண்ணித் தொலைங்க என்ற
பெருந்தன்மை என
ஏகப்பட்டவைகள் இருக்கும்.

*****

No comments:

Post a Comment