9 Nov 2017

மாபெரும் அறிவாளியான ஒரு மாபெரும் முட்டாள்!

மாபெரும் அறிவாளியான ஒரு மாபெரும் முட்டாள்!
            எஸ்.கே. அவரது பெரும்பாலான பிரச்சனைகள் பற்றி யாரிடமும் பேசுவதில்லை. அதுவே அவருக்குப் பல பிரச்சனைகள் ஏற்படாமல், பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றி வருவதாக அவர் நினைக்கிறார்.
            யோசித்துப் பார்த்த பின்னர் எஸ்.கே. பல தீர்க்கமான முடிவுகளுக்கு வந்தார். மனதும், சொல்லும், செயலும் நிதானமாகவும், பொறுமையாகவும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படுவது இல்லை என்பது அத்தகைய முடிவுகளுள் ஒன்று.
            குறிப்பாக சொல்லில் கொள்ளும் மெளனம் பல பிரச்சனைகளின் வேர்களை அறுத்து விடுகிறது. புதிது புதிதாக முளை விடும் பிரச்சனைகளையும் அழித்து விடுகிறது.
            அதற்கு அடுத்தாற் போல் நிதானமாக செயலாற்றினால் எந்தத் தவறும் ஏற்படுவதில்லை. ஏற்பட்டாலும் அதை எந்த நிலையிலும் திருத்திக் கொள்ளலாம். ஒருவேளை அந்தத் தவறைச் சரி செய்யா விட்டாலும் அது பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை. அதுதான் நிதானத்தின் சிறப்பு.
            பிரச்சனைகளைப் பேசுவது குறித்த எஸ்.கே.யின் இந்த அணுகுமுறை சரியா?
            சரியென்று சொன்னாலும் நூறு விழுக்காடு சரிதான்.
            தவறு என்று சொன்னாலும் நூறு விழுக்காடு சரிதான்.
            ஒரு கேள்வி இப்படி இரு மாறுபட்ட பதிலுக்கும் நூற்றுக்கு நூறு பெறுவது எஸ்.கே.வின் கேள்விகளில் உள்ள தனித்துவம்.
            பிரச்சனைகளை யாரிடமும் பேசாமல் மெளனம் கொள்வது சரிதானா? யாரிடம் பேசாமல் இருக்கிறோம் என்பதைப் பொருத்து அது சரி. யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடமும் பேசாமல் இருப்பதைப் பொருத்து தவறு.
            ஒரு பிரச்சனை குறித்து எல்லாரிடமும் பேசி விட முடியாதுதான். ஆனால் பேச வேண்டியவர்களிடமும் பேசாமல் போனால் மேலே அடுக்கிய எஸ்.கே.வின் அனைத்து வாதங்களும் அபத்தமாகி விடும்.
            இப்படித்தான் எஸ்.கே. மாபெரும் அறிவாளியாகவும், மாபெரும் முட்டாளாகவும் இருவிதமாகவும் தோற்றம் கொள்கிறான்.
            நீங்கள் அவனிடம் எடுத்துக் கொள்வதைப் பொருத்து அவன் அறிவாளியாகவும், முட்டாளாகவும் இருக்கிறான். மற்றபடி அவன் எஸ்.கே.வாகவே இருக்கிறான்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...