10 Nov 2017

பலி

பலி
கிடா வெட்டும்
பலிப் பொழுதில்
ஒரு மனிதத் தலை
தவறுதலாக உள் நுழைந்து
துண்டு பட்டு விழக்கூடும் என
அய்யனாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அன்றோடு நின்று போன திருவிழாவில்
அதற்குப் பின்
எலும்பிச்சைப் பழங்களைக்
காவு கொடுப்பதொடு
நிறுத்திக் கொள்வதென
முடிவெடுத்துக் கொண்டார் அய்யனார்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...