3 Nov 2017

கருப்புப் பணத்தின் கெட்ட வாடை

கருப்புப் பணத்தின் கெட்ட வாடை
இடைத்தேர்தல் நடக்கும்
இந்தத் தொகுதி முழுவதும்
கருப்புப் பணத்தின்
கெட்ட வாடை அடிக்கிறது
இரண்டு லட்சத்திற்கு மேல்
பணப்பரிமாற்றம் செய்ய முடியாத
பாமரன் கண்முன் நடக்கும்
பலகோடி பரிமாற்றங்கள்
அவனை கேலி செய்து
சிரிப்பது போலிருக்கிறது.
மூணு லட்சத்திற்கு மேல்
புதிய ரூபாய் நோட்டுகளை
மாற்றிட முடிந்திடாத சாமான்யனை
சோதனையில் சிக்கும் கோடிகள்
சம்மட்டி கொண்டு
பின் மண்டையில் தாக்குகிறது
இந்த நாட்டின்
கருப்புப் பணத்தையும், கள்ளப்பணத்தையும்
தீவிரமாக உருவாக்கும் அரசியல்வாதிகள்
அந்தப் பழியைத் தூக்கி
தீவிரவாதிகள் மேல் போட்டார்கள்
வரிஏய்ப்பின் கில்லாடிகளான அவர்கள்
வரிவிதிப்புகளை
சாமர்த்தியமாக நம் மேல் திணித்தார்கள்
பணமென்னும் மாயப் பிசாசின் அடிமைகளான
அவர்கள்
வாக்குகளை விலைக்கு வாங்கி
நீதிமன்ற வழக்குகளை
இழுத்தடித்துக் கொண்டார்கள்
அவர்களின் பணத்தின் முன்
மண்டியிடும் நம்மை நம்பித்தான்
இருட்டில் பிச்சை எடுக்கும்
ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் போல்
ஏதோ ஒரு நம்பிக்கையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
அப்பாவியான ஜனநாயகம்.

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...