6 Nov 2017

யானை முக பிரார்த்தனை

யானை முக பிரார்த்தனை
மின்வேலியில் அடிபடாத
யானையொன்று
கோயில் யானையாக வாழப் பழகியிருந்தது
யானைக் கூட்டத்தோடு சாகப் பிராப்தம்
இல்லாத அது
பாகன் கையால் தினம் அடிபட்டுக் கொண்டிருந்தது
தன் இணையைப் பிரிந்த ஏக்கத்தை
தம்பதிகளாய் வருவரை
துதிக்கை வைத்து ஆசிர்வதிப்பதன் மூலம்
தீர்த்துக் கொண்டது
தன் குட்டியைக் கொஞ்சும் ஆசையையெல்லாம்
சிறுகுழந்தைகளுக்கு காட்டும் வேடிக்கை மூலம்
போக்கிக் கொண்டது
கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார் இறைவன்
என்று வரும் பக்தர்களைப் பார்த்துக் கொண்டு
கோயில் வாயிலில் நிற்கும் அது
இன்னும் எத்தனை காலம்
மோட்சம் பெறாத அடிமையென வாழும்
இந்த வாழ்க்கை என்று
இறைவனைத் தினம் தினம் பிரார்த்திக் கொண்டது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...