கடின உழைப்பார்களே நிறுத்துங்கள்!
நீங்கள் கடினமாக உழைத்ததெல்லாம் போதும்!
பத்து தலைமுறைக்கு நீங்கள் சொத்து சேர்த்து
விட்டது எங்களுக்குத் தெரியும்.
இன்னும் பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதற்காகவும்,
பிரபல்யம் தேடிக் கொள்வதற்காகவும் நடிப்பதை கடின உழைப்பு என்ற பெயரில் கொச்சைப் படுத்தாதீர்கள்.
கடின உழைப்பு என்ற பெயரில் நீங்கள் தரும்
மசாலா படங்களால் கலையுலகம் மொக்கையாகப் பல்லிளிக்கிறது.
நீங்கள் நடிப்பதன் மூலம் பல தொழிலாளர்களின்
வாழ்வில் ஒளியேற்றுவதாக தயவுசெய்து சொல்லவே சொல்லாதீர்கள்.
உங்களின் ஊதியத்துக்கும், அவர்களின் ஊதியத்துக்கும்
ஏணி வைத்தால் கூட எட்டாது. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. அவர்களின்
வயிற்றில் அடித்து உழைப்பை உறிஞ்சி அதிலும்தான் லாபம் பார்க்கிறீர்கள்.
பிரபல்யத்தை, விளம்பரத்தை நீங்கள் காசாக்குவது
போல் எத்தனை தொழிலாளிகள் காசாக்க முடியும் சொல்லுங்கள்?
*****
No comments:
Post a Comment