4 Nov 2017

இடியாப்பக் கணக்கு

இடியாப்பக் கணக்கு
கணினி மண்டை குழம்பிப் போகலாம்
கால்குலேட்டர் எண்கள் வெடித்துச் சிதறலாம்
பொருளாதார வல்லுநர்கள்
முடிகொட்டிப் போய்த் திரியலாம்
கணக்குத் தணிக்கையாளர்கள்
கூட்டிக் கழித்து
நரம்புத் தளர்ச்சிக்கு ஆளாகலாம்
ஒரு இடைத்தேர்தல் செலவுக் கணக்கு என்பது
தீர்க்கப்படாத அப்படி இப்படி ஒரு
இடியாப்பக் கணக்கு.

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...