4 Nov 2017

ஒரு கிலோ மனசாட்சியின் விலை

ஒரு கிலோ மனசாட்சியின் விலை
சந்தைப் பொருளாதாரத்தின் கதவுகள்
திறந்து கொண்ட போது
தன்னிறைவான சிந்தனைகள்
காவு கொடுக்கப்பட்டன.
எல்லாவற்றுக்கும் ஒரு விலை
நிர்ணயிக்கப்பட்டு
மக்களின் வாங்கும் சக்திக்கேற்ப
சாஷேவில் அடைக்கப்பட்டது.
நேர்மையை வாங்க
சில பணம் செலவழித்தால்
ஒரு விருது வழங்கப்பட்டது.
தரத்தை வாங்க
கொஞ்சம் பணம் செலவழித்தால்
சான்றிதழ் வழங்கப்பட்டது.
கல்வியை வாங்க
வங்கிகளில் அடமானத்துக்குத் தக்க
கடன் வழங்கப்பட்டது.
உடம்புக்கும் அதன் நலத்துக்கும் கூட
காப்பீடு என்ற பெயரில்
மாதா மாதம் ஒரு கட்டணம் பெறப்பட்டது.
ஜனநாயகத்தை விட்டு வைத்தால்
ஆபத்து என்று
அதற்கும் ஓர் ஓட்டுக்கு இத்தனை பணம் என்று
ரகசியமாக வாங்கப்பட்டது.
வாங்கியதன் அடையாளமாக
நம் வங்கிக் கணக்கில்
மிச்ச சொச்சம் வரவு வைக்கப்பட்டன
மானியங்களோடு
நம் ஆன்மாவின் அழுகைகளும்
அத்தோடு மீந்த நம் வாழ்வாதாரக் கதறல்களும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...