17 Nov 2017

பெயர்ந்துப் போன பெயர் சூட்டுபவன்

பெயர்ந்துப் போன பெயர் சூட்டுபவன்
வாசனை திரவியத்தின் பெயரைச் சொல்லி
என்னை அழைப்பவள்
அவன் வீட்டுப் பெண்களை
அவரவர் பெயர் கொண்டுதான் அழைக்கிறான்.
அவனுக்காக
வாசனைத் திரவியங்களை
மாற்றிப் பார்த்தேன்.
மாற்றியதன் பெயரால்
அழைப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டான்.
வாசனைத் திரவியங்களைப்
பயன்படுத்துவதில்லை என்ற
முடிவெடுத்த போது
அவனோடு தொடர்பறுந்து போனது
தற்செயலா
கடவுளின் விளையாட்டா என்று
எப்போதாவது அவனைச் சந்தித்தால்
கேட்கலாம் என்றிருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment