17 Nov 2017

புதிய திருப்பம்

புதிய திருப்பம்
கட்டிக் கொண்ட பின்
குடிகாரன் என அறிந்து
டாஸ்மாக்கிற்கும் வீட்டிற்கும்
மீன் பாடி வண்டி போல்
அலைவது முதலில் புதிதாக
அதன் பின் புதிராக இருந்தது.
அவன் அடிகளைச் சுமப்பது
கருப்பையில் கட்டிகளைச் சுமப்பது போல
அவத்தையாக இருந்தது.
தினம் வாந்தியைக் கூட்டிக் கழுவுவது
குடலைப் புரட்டி எறியும்
குமட்டல் வதையாக இருந்தது.
மது நொடியோடு அவன் தொடுவதும்
முத்தமிடுவதும்
பூரான் நெளிவது போலவும்
வெறிநாய்க் கடிக்கு ஊசி போடுவது போலவும் இருந்தது.
அவனைச் சகிப்பதும் சமாளிப்பதும்
பைத்தியக்காரனின் கையிலிருக்கும்
கத்தியில் காய்கறி நறுக்குவது போல
கஷ்ட சிரமமாக இருந்தது.
இவைகளெல்லாம் இருந்தது
இருந்தது இருந்தது இருந்தது
அவனைப் போல
ஒரு குடிகாரியாக ஆகும் வரை.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...