22 Nov 2017

உபயோகமற்ற மழையும் வெயிலும்

உபயோகமற்ற மழையும் வெயிலும்
எந்தக் காட்டில்
பொழிவதென்று தெரியாமல்
இந்தக் கட்டிடக் காட்டில்
வெள்ளமெனப் பொழிந்து கொண்டிருக்கிறது
உபயோகமற்ற மழை.
எந்தப் பிரதேசத்தில்
அடிப்பதென அறியாமல்
இந்தக் காங்க்ரீட் பிரதேசத்தில்
அடித்துக் கொண்டு இருக்கிறது
தாவர முலைகளிலிருந்து
நீர் பால் குடிக்க இயலா
உபயோகமற்ற வெயில்.

*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...