1 Nov 2017

கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்!

கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்!
            சரியான நேரத்தில் ஒரு காரியத்தை நிகழ்த்த முடியாவிட்டால் கோபம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அதற்கு நீங்கள் மட்டுமா காரணம்?
            சுற்றியிருக்கிறவர்கள், சுற்றியிருக்கிற சூழ்நிலைகள் என்று ஒவ்வொன்றும் காரணமாக இருக்கிறது. ஆக, கோபப்பட்டு உடலைப் பாதித்துக் கொள்வதை விட அமைதியாக இருப்பதன் மூலம் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்ய முடியும்.
            இது போன்ற கோபங்களை எல்லாம் அலட்சியப்படுத்துதல் எனும் செயல் மூலம்தான் தணிக்க முடியும்.
            மற்றுமொரு வழி காத்திருத்தல் அல்லது கொஞ்சம் பொறுத்திருத்தல்.
            காத்திருத்தல் ஓர் அற்புதமான தவம். அதுவே வரங்களைத் தருகிறது. இந்த உலகில் நடக்கும் ஒவ்வொன்றும் காத்திருத்தலுக்காக வைக்கப்படும் சோதனைகளே. காத்திருந்தால் எல்லாம் ஒரு நாள் கை மேல் வந்து சேரும்.
            சரியான நேரத்தில் சரியாக நடக்க வேண்டிய காரியங்கள் நடக்காத போது காத்திருத்தல் மூலம் அந்தக் காரியம் சரியாக மீண்டும் நடப்பதற்கு நம்மால் ஒரு வாய்ப்பு வழங்க முடியும்.
            அவரசப்படுவதன் மூலமோ, கோபப்படுவதன் மூலமோ சரியாக நடக்க வேண்டிய ஒரு காரியம் மிக மோசமாக நடப்பதற்கே நாம் வழிவகை செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொண்டால் காத்திருத்தலின் உண்மையும், வலிமையும் புரிய வரும். பல நேரங்களில் தெய்வத்தால் ஆகாத காரியங்கள் கூட கொஞ்சம் காத்திருத்தல் மூலமும் பொறுமையாக இருப்பதன் மூலமும்தான் சாதிக்கப்படுகிறது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...