கல கல லக லக
இரண்டு ரூபாய்
சில்லரையை வீசி
இரண்டாயிரம்
நோட்டுகளாகப் பொறுக்கலாம்
இரண்டாயிரம்
நோட்டுகளாக வீசி
இரண்டாயிரம்
கோடி வரை சுருட்டலாம்
இரண்டாயிரம்
கோடி வரை எடுத்து
இரண்டு லட்சம்
கோடி வரை ஊழல் செய்யலாம்
இரண்டிரண்டாய்
செய்து விட்டு
ஒன்றுமில்லையென
கடைசியில்
வழக்காடி முடிக்கலாம்
இரண்டுங் கெட்டான்
நிலையிலேயே
இந்த நாட்டு
மக்களையும் வைக்கலாம்
கல கல
பக பக
லக லக
வயிறு வலுக்க
விலா புடைக்க
சிரித்தது
அரசியல்.
*****
No comments:
Post a Comment