21 Nov 2017

மீண்டும் மீண்டும் கூவல்

மீண்டும் மீண்டும் கூவல்
நிறைய முன்னேற வேண்டுமென்ற
கனவுகளோடு
ஊர்ப் பணத்தில் ஊழல் செய்து
கோயில் பணத்தில் கொள்ளை அடித்து
டெண்டர் எடுத்து
அண்டர் கிரெளண்ட் வேலை பார்த்து
மாளிகைக் கட்டி
மணம் செய்து
மனைவியை வியாதிக்குப் பலி கொடுத்து
மகனை விபத்துக்குப் பலி கொடுத்து
பூர்ணசந்திரன்
மீண்டும் ஒரு மணம் செய்து கொண்டார்
மறுபடியும் நிறைய முன்னேற வேண்டுமென்ற
கனவுகளோடு
வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்குவதற்கு.

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...