1 Nov 2017

வேட்புமனுக்களின் நம்பிக்கைகள்

வேட்புமனுக்களின் நம்பிக்கைகள்
ஜனநாயகம் காக்க
பணநாயகத்துக்கு முடிவு கட்ட
ஊழலற்ற நல்லாட்சி அமைய
குற்றங்கள் தண்டிக்கப்பட
மக்கள் நலம் பெற
ஒடுக்கப்பட்டோர் உயர்ந்தெழ
சிறுபான்மையினோர் சிலிர்த்தெழ
இப்படியெல்லாம்
அற உணர்ச்சியை ஊட்டி
மனசாட்சியைத் தட்டியெழுப்பி விடலாம்
என்ற நம்பிக்கையில் தேர்தல்கள் நடக்கின்றன.
ஓட்டுக்குப் பணத்தைக் கொடுத்து
மனசாட்சியைக் கொன்று விடலாம்
என்ற நம்பிக்கையில் வேட்புமனுக்கள் தொடங்குகின்றன.

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...