16 Oct 2017

மறைக்கும் மின்னல்கள்

மறைக்கும் மின்னல்கள்
ஒரு சாலை விபத்து
ஒரு பிரசவத்தில் தாயும் சேயும் மரணித்த பொழுது
மின்தடையில் பாதியில் நின்ற அறுவை சிகிச்சை
ஆணவக் கொலையில் உயிர் நீத்த சடலம்
ஆழமாய் இறங்கிக் கொண்டிருக்கும்
ஹைட்ரோ கார்பனுக்கானக் குழாய்கள்
வறட்சியில் தூக்கில் தொங்கிய விவசாயி
மாரடைப்பில் செத்த நிலக்கிழார்
மூடி மறைத்து தொலைக்காட்சியில்
மின்னி மின்னி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு ப்ரேக்கிங் நியூஸ்.

*****

No comments:

Post a Comment