16 Oct 2017

ராயல்டி

ராயல்டி
ஒரு குயில் பாடிய
பாடலை
நகலெடுத்து அப்படியே
இன்னொரு குயில்
ராயல்டி ஏதும் தராது
பாடிச் சென்றது.
கேட்ட மனிதர்கள்
கொட்டிச் சென்ற
காசைக் கணக்கிலெடுக்காது
வானவெளியில்
ஒரு கரும்புள்ளியாய் ஒடுங்கியது இசை.
பிரதியெடுத்த மனிதர்களிடையே
ஆரம்பமானது
பங்குப் பிரித்துக் கொள்வதற்கான
உலகச் சண்டை.

*****

No comments:

Post a Comment