அரச கொடை
உணவில்லாத
வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது
பசி.
நீரில்லாத
வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது
தாகம்.
ஆடைகளில்லாத
வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது
நிர்வாணம்.
வீடில்லாத
வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது
பொட்டல்வெளி.
நமக்கு நம்
அரசுகளால்
கொடுக்கப்பட்டிருப்பது
மிக மிக அதிகம்தான்.
*****
No comments:
Post a Comment