ரட்சகர்களாக அவதரிக்கும் பிரம்ம ராட்சசர்கள்
நாடெங்கும்
மரம் வளர்த்த ஒருவன்
காட்டை அழித்து
பிரமாண்ட மாளிகை
செய்து கொண்டான்
வெட்டப்பட்ட
மரங்களுக்கும்
நடப்பட்ட மரங்களுக்குமான
விகிதாச்சாரம்
சூரியன் போன்ற
விளம்பர வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள்
போல் மறைகின்றன
வாகன விளக்கை
அணைத்துப் போடாமல்
வரும் ஒருவனின்
வெளிச்சத்தைப் போல்
கண்களைக் கூச
செய்கின்றன
ஒரு காரிருள்
தேவைப்படுகிறது
வறட்சியைப்
போல, பருநிலை மாற்றங்களைப் போல
காண முடியாத
காட்சிகளைக் கண்டு கொள்ளவும்
விளங்க முடியாத
உண்மைகளை விளங்கிக் கொள்ளவும்
அந்தக் காரிருளே
போதுமானதாக இருக்கிறது
பிரமாண்ட மாளிகை
செய்து கொண்ட
பிரம்ம ராட்சசர்கள்
ரட்சகர்கள் போல்
ஒளிந்துக்
கொள்ளவும்.
*****
No comments:
Post a Comment