மரணங்கள் பலவிதம்!
தமிழ்நாட்டில் சாவு எப்படி வேண்டுமானாலும்
நிகழலாம்.
சிறிய கொசு கடித்து டெங்குவாலும் நேரலாம்.
பெரிய பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்தும்
நேரலாம்.
வீட்டு மனையில் இருக்கும் போது முன்னறிவிப்பு
இல்லாமல் திறந்து விடப்படும் ஏரி நீராலும் நிகழலாம்.
பணிமனையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது
இடிந்து விழும் மேற்கூரையாலும் நேரலாம்.
நன்றாகப் படித்தும் விரும்பியதை மேற்கொண்டு
படிக்க முடியாமலும் நேரலாம்.
ஒன்றாக இணைந்து வாழ்வோம் என காதல் மணம்
புரிவதாலும் நேரலாம்.
விவசாயம் செய்ய முடியவில்லையே என்ற வாழ்வாதாரம்
இழந்த விரக்தியாலும் நேரலாம்.
நேர்மையாக பணியாற்ற முடியவில்லையே என்று
ரயில் முன் பாய்வதாலும் நேரலாம்.
வங்கிக் கடனுக்கான உயிர் பறிமுதலாலும்
நேரலாம்.
பட்டாசு தொழிற்சாலை வெடிப்பதாலும் நேரலாம்.
சகல வசதிகள் நிறைந்த உலகத்தரம் வாய்ந்த
மருத்துவமனையில் இட்டிலி சாப்பிட்ட பின்னும் நேரலாம்.
எந்த வசதியும் இல்லாமல் இட்டிலி கூட வாங்க
வழியில்லாமல் பட்டினியாலும் நேரலாம்.
மரணங்கள் பலவிதம். தமிழ்நாட்டில் நிகழும்
மரணங்கள் புதுவிதம்.
*****
அருமை ஐயா
ReplyDelete