22 Oct 2017

மரங்களை வளர்க்க மனிதன் தேவையில்லை

மரங்களை வளர்க்க மனிதன் தேவையில்லை
காட்டு மரங்களை அழித்த போது
நாங்கள் கேட்கவில்லை
நாட்டு மரங்களில் கை வைத்த போதும்
எதுவும் சொல்லவில்லை
சாலையோரம் இருந்த
மரங்கள் எல்லாம் அழிந்தன
நாங்கள் நீரூற்ற மறந்து
மரங்களை நட்டு வைப்பதில் மட்டும்
கவனமாக இருந்தோம்
வெட்டப்பட்டாலும் நட்டப்பட்டாலும்
நடப்படாமல் போனாலும்
மரங்களை வளர்க்க
மனிதர்கள் தேவையில்லை
மரங்களே போதும்
மனிதர்கள் மரங்களில்
கை வைக்காமல் இருந்தால் போதும்
நடுவது உட்பட.

*****

No comments:

Post a Comment