24 Oct 2017

முதலாகி முடிவாகி நதியாகி

முதலாகி முடிவாகி நதியாகி
ஆதியில் மணல் இருந்த
நதியில்
மீன்கள், பாம்புகள், தவளைகள்
புழுக்களைத் தின்றன.
முடிவில் மணலற்ற நதியில்
புழுக்கள்
மீன்களை, பாம்புகளை, தவளைகளைத்
தின்றன.
கருப்புச் சாக்கடை நதியில்
தூண்டிலுக்குள் செருக
ஏராளமான புழுக்கள்
இருக்கின்றன
தூண்டில் போடுவதற்குத்தான்
மீன்கள் இல்லை.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...