கேள்விக்கு துணை நில்லுங்கள்!
எது சிக்கலோ, எது பிரச்சனையோ அது கேள்விகளால்
எதிர்கொள்ளப்பட வேண்டும். கேள்விகள் முன் நியாயமாக உள்ளவைகள் நிற்கின்றன. நியாயமற்றவைகள்
வீழ்கின்றன.
கேள்விகளால் எதிர்கொள்ள நாம் பயப்படுகிறோம்.
அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டும் இருக்கிறோம்.
நாம் கேள்விகளால் எதிர்கொண்டால் நாமும்
கேள்விகளால் எதிர்கொள்ளப்படுவோமோ என்ற ஆழ்மன அச்சம் எல்லாருக்கும் இருக்கிறது.
யாரும் என்னை எந்த வித கேள்வியும் கேட்டு
விடக் கூடாது என்ற ஆதிக்க மனப்பான்மையும் நம்மில் சிலருக்கு இருக்கிறது.
இந்த இரண்டு விதமான போக்குகளால் இரண்டு
விதமான தீமைகள் வித்திடப்படுகின்றன.
முதல் போக்கால் நம் முன் கண் முன் நிகழும்
அநியாயங்கள் கேள்விகள் இன்மையால் மழுப்பப்படுகின்றன. அநியாயங்கள் நியாயங்கள் போல்
ஏற்க வைக்கப்படுகின்றன.
இரண்டாவது போக்கால் சர்வாதிகாரப் போக்கிற்கு
நம்மையும் அறியாமல் நாம் காரணம் ஆகிறோம்.
ஒட்டு மொத்தமாக கேள்விகளை மறுதலிக்கும்
போதும், கேள்விகள் கேட்க அச்சுறுத்தப்படும் மனநிலைக்கு ஆளாகும் போதும் ஜனநாயகத் தன்மையை
மறுதலிக்கும் நிலைக்கு ஆளாகிறோம். நமக்கொரு அநியாயம் என்றால் மட்டும் நாட்டில் ஜனநாயகத்
தன்மை இல்லை என்று புலம்பித் தள்ளுகிறோம்.
கேள்விகள் நிறையவற்றை மாற்றும், நம் புலம்பல்
உட்பட.
*****
No comments:
Post a Comment