அலட்சியப் பேரிடர்கள் அப்படித்தான் உருவாகின்றன!
பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில்கள்,
ரயில் நிலையங்கள், நகர்ப்புறக் கடைகள், நகர்ப்புற கடை வீதிகள் ஆகியன கூட்ட நெரிசல்களால்
பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
வட இந்தியா, தென் இந்தியா என்ற பேதமில்லாமல்
இந்தியா முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்படத் துவங்கி விட்டது.
தமிழ்நாட்டில் பேருந்து நிலையத்தின் மேற்கூறை
இடிந்து விழுந்து பலி ஏற்பட்டால், வட நாட்டில் மும்பையில் ரயில் நிலையத்தில் கூட்ட
நெரிசலால் பலி ஏற்படுகிறது.
இயற்கைப் பேரிடர்களை விட இது போன்ற அலட்சியப்
பேரிடர்கள் தொடர் கதைகள் போல தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
எந்த மேற்கூரை எப்போது இடிந்து மேலே விழும்
என பேருந்து நிலையத்தில் நிற்பவரின் மனநிலையும், எப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு இறப்போம்
என தெரியாமல் ரயில் நிலையங்களில் பயணிப்பவரின் மனநிலையும் பரிதாபகரமானது, மற்றும் ஒரு
பேருந்து நிலையத்தில் நிற்பதற்கும், ரயில் நிலையத்தில் பயணிப்பதற்கும் அடிப்படையான
ஜீவாதார உரிமை இல்லாத பாவப்பட்ட வாழ்க்கைக்கும் உரியது.
சமூக வலைதளங்களில் அனைத்தும் இன்று பகிரப்படுகின்றன,
வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன, மாற்றித் தருமாறு கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
அவைகளைக் கண்டறிந்து குறைபாடுகளை களைவது
இன்றைய காலக்கட்டத்தில் மிக எளிதானது. ஆனால் என்ன செய்வது? அவைகளை நிறைவேற்றித் தருவதற்கான
சம்பந்தப்பட்டவர்களின் மனோபாவம் மிக மோசமானது.
எல்லாவற்றையும் சரியாக நிறைவேற்றித் தந்து
விட்டால் மாமூலாக லவட்டிக் கொள்ளும் பணத்திற்காக அதில் அவர்கள் எதில் கை வைக்க முடியும்
என்பது அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் என்பதால் எவை எவைகளை நிறைவேற்றித்
தர வேண்டும், எவை எவைகளை நிறைவேற்றித் தராமல் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட வேண்டும்
என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அலட்சியப் பேரிடர்கள் அப்படித்தான் உருவாகின்றன,
உருவாக்கப்படுகின்றன.
*****
No comments:
Post a Comment