3 Oct 2017

கரை ஒதுங்காத் திமிங்கிலம்

கரை ஒதுங்காத் திமிங்கிலம்
திமிங்கிலமே
என்னை விழுங்கி விடுவாய்
சிறிய மீனான நான்
உன்னைத் தந்திரமாக
கரைக்கு அழைத்து வருவேன் ஒரு நாள்.
அதுவரை கரை ஒதுங்கிக் கிடக்கும்
நியாயங்களை
அலைகளாய்ப் பாடிக் கொண்டிருப்பேன்
கோபங்களைக்
காற்றாய் வீசிக் கொண்டிருப்பேன்
கண்ணீரை
நீர்த்துளிகளாய் கரைகளில் தெளித்துக் கொண்டிருப்பேன்
கரை ஒதுங்காத் திமிங்கிலமாய்
உன்னை கடலில் வாழ மட்டும்
அனுமதிக்க மாட்டேன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...