உனக்கு மட்டுமேயான கூகுள் கண்கள்
நான் இருக்கும்
இடம்
உன் கூகுள்
மேப்பில் தெரிந்து விடும்
வருவாய், அடிப்பாய்,
உதைப்பாய்,
சித்திரவதை
செய்வாய்
புகார் செய்தால்
காணாமல் போய் விடுவாய்
சட்டத்திற்கோ,
நீதிக்கோ
கூகுள் மேப்பைக்
கொண்டு
உனைத் தேட
வேண்டும்
என்று தோன்றாது
எல்லாம் உறங்கும்
தருணத்தில்
மறைந்திருக்கும்
நீ என்னை
கூகுள் மேப்பில்
தேடத் தொடங்கி
வருவாய், அடிப்பாய்,
உதைப்பாய்
சித்திரவதை
செய்வாய்
மீண்டும் முதலிலிருந்து
துவங்கும்
ஒவ்வொன்றும்.
*****
No comments:
Post a Comment