மனித வேட்டைக்காரர்கள்
ஆழ்கடலில்
பிடிக்கச் சென்ற
அத்தனை மீன்களும்
ஓடி ஒளிந்தன.
"இனியும்
எம்மைப் பிடிக்க வராதீர்கள்!" என்று
அவைகள் வேண்டிக்
கொண்டன.
விடாமல் துரத்தித்
திரியும் படகுகளுக்காக
திசை மாற்றும்
உபாயத்தை
அவைகள் கையில்
எடுப்பதற்குள்
துப்பாக்கிச்
சத்தம் கேட்டதுதான் தாமதம்,
செத்து விழுந்த
ஒரு மீனவனின் ஓலக்குரலின் ஊடே
"இதற்குதான்!
இதற்குதான்!
இனி ஒரு போதும்
எம்மைப் பிடிக்க வராதீர்!"
அழுது கொண்டே
மூழ்கி மறைந்தன மீன்கள்!
*****
No comments:
Post a Comment