18 Oct 2017

தெரு முக்கு விநாயகர் மன்னிப்பு கோரும் விண்ணப்பம்

தெரு முக்கு விநாயகர் மன்னிப்பு கோரும் விண்ணப்பம்
ஆம்புலன்ஸ் வர தாமதமாக
ஒரு டூவீலரில்
ஒட்டுவதற்கு ஒருவர் உட்கார்ந்து கொண்டு
உயிருக்குப் போராடும் அவரை நடுவில் இருத்தி
பின்னால் ஒருவர் அமர்ந்து தாங்கிக் கொள்ள
மருத்துவமனை நோக்கி செல்லும்
முன் - பின் அமர்ந்திருக்கும் இருவரும்
சட்டம் ஒழுங்கை மதிக்காத
தேவதூதர்களாக தோற்றம் தருகிறார்கள்.
விரைந்து சென்று கொண்டிருக்கும் அவர்களிடம்
வழியிடைபடும் தெருமுக்கு விநாயகர்
மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார்
விரைந்து வர வைக்க முடியாத ஆம்புலன்ஸிற்காக.

*****

No comments:

Post a Comment